நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் விண்வெளி தின விழா கொண்டாடப்பட்டது.
சந்திராயன் -3, விண்வெளியில் செலுத்திய தினமான ஆகஸ்ட் 23ம் தேதி விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட வானியல் மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமையில், அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் தொலைநோக்கி மூலம் தொலைதுார பொருட்களை காண்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லுாரி தலைவர் பூபதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாணவியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். கல்லுாரி முதல்வர் தென்னரசி, துணை முதல்வர் ரீனா மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

