/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வள்ளலார் மன்றத்தில் சிறப்பு வழிபாடு
/
வள்ளலார் மன்றத்தில் சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 05, 2024 12:20 AM
சங்கராபுரம்: கேரளா, வயநாடு பகுதியில் நிலச்சரிவால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கேரளா வயநாடு பகுதியில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும், மண்ணில் புதையுண்டவர்களின் உடல்களை தேடும் பணி தீவிமாக நடந்து வருகிறது.
இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.
மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் முத்துக்கருப்பன், ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜனார்தனன், ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.