/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
/
மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
ADDED : ஆக 19, 2024 12:26 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தி.மு.க., இளைஞரணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா பேச்சுப் போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த போட்டிக்கு, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், தலைமை தாங்கினர்.
மலையரசன் எம்.பி., உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிகண்ணன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அப்துல்மாலிக் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தாகப்பிள்ளை வரவேற்றார்.
'என் உயிரினும் மேலான' எனும் தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவிகள் பேசினர்.
போட்டி நடுவர்களாக தோல் உற்பத்தி தொழிலாளர் நல வாரிய தலைவர் புகழேந்தி, தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் லெனின், இலக்கிய அணி இணை செயலாளர்கள் இறைவன், தலைமை கழக பேச்சாளர் ஒப்பிலாமணி, கொள்கை பரப்பு துணை செயலாளர் உமா, பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி ஆகியோர் பங்கேற்று சிறப்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஷ்வரி பெருமாள், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழியன், கனகராஜ், ஒன்றிய சேர்மன்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன், மாவட்ட பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ் நன்றி கூறினார்.