ADDED : ஜூன் 14, 2026 03:30 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மகள் சுஜித்ரா,18; இவர், கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., விலங்கியல் இரண்டாமாண்டு படிக்கிறார். சுஜித்ராவுக்கு படிக்க விருப்பம் இல்லாததால் கடந்த சில தினங்களாக கல்லுாரிக்கு செல்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சுஜித்ரா வீட்டில் தனது அறையில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுஜித்ராவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
