தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தீ விபத்தில் பாதிப்பு :த.வெ.க., நிவாரணம்

தீ விபத்தில் பாதிப்பு :த.வெ.க., நிவாரணம்

தீ விபத்தில் பாதிப்பு :த.வெ.க., நிவாரணம்


UPDATED : ஜூன் 14, 2026 03:53 PM

ADDED : ஜூன் 14, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 03:53 PM ADDED : ஜூன் 14, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை தொகுதியில் தீ விபத்தால் பாதித்த குடும்பங்களுக்கு த.வெ.க., சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

உளுந்துார்பேட்டை அடுத்த பெரியசெவலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அமிர்தவல்லி பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முருகன் மனைவி அம்பிகா. கடந்த 12ம் தேதி அமிர்தவல்லியின் கூரை வீடு எரிந்து, 2 வீடுகளில் இருந்த பொருட்கள் சேதமானது.

தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலாளர் பரணி பாலாஜி, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீயால் பாதித்த இரு குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறி, தலா 2,500 ரூபாய் உதவித் தொகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.

மாவட்ட இணைச் செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் சிவக்குமார் உட்பட ஒன்றிய, நகர செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us