/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது மக்கள் திடீர் சாலை மறியல்: சங்கராபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு
/
பொது மக்கள் திடீர் சாலை மறியல்: சங்கராபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு
பொது மக்கள் திடீர் சாலை மறியல்: சங்கராபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு
பொது மக்கள் திடீர் சாலை மறியல்: சங்கராபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 08, 2024 01:31 AM

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டடதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பேரூராட்சி 5 வது வார்டு (ஆற்றுப்பாதை தெரு)பகுதியில் 600 க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலை சுத்தம் செய்யாததால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கழிவு நீர் செல்லும் பாதையை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததால் கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது. நேற்று பேரூராட்சி சார்பில் கழிவு நீர் வாய்க்காலை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் சென்றனர். அப்போது அவர்களை தனி நபர் தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொது மக்கள் ஆற்றுப்பாலம் அருகில் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சங்கராபுரம் தாசில்தார் சசிகலா,இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன்,சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன்,வருவாய் ஆய்வாளர் கல்யாணி,வி.ஏ.ஓ.,குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தி, இதன் மீது உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.
இதனால் அந்த பகுதியில் பகல் 2.30 முதல் 3.30 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.