/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தையுடன் கர்ப்பிணி தற்கொலை முயற்சி உளுந்துார்பேட்டையில் பரபரப்பு: போலீசார் விசாரணை

ADDED : ஆக 25, 2024 05:32 AM
கள்ளக்குறிச்சி: குழந்தையுடன், கர்ப்பிணி பூச்சிக் கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன். மனைவி ரபிதா,20; காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒன்றரை வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. ரபிதா தற்போது 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் கண்ணதாசன் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு, ரபிதாவை துன்புறத்தினர். இதுகுறித்து ரபிதா அளித்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், கடந்த 7ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பினர்.
ஆனால், ரபிதா கணவர் வீட்டிற்குச் செல்லாமல், அதே கிராமத்தில் உள்ள தந்தை லோகநாதன் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை உளுந்துார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே தனது ஒன்றரை வயது குழந்தையான கனிஷ்காவிற்கு குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்துவிட்டு, அவரும் குடித்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த இருவரையும், அவ்வழியே சென்றவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.