/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்தவர் கைது
/
மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்தவர் கைது
ADDED : ஆக 02, 2024 11:32 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி, நகையை அபேஸ் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பாதுார் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் மனைவி ஆண்டாள், 70; இவர் கடந்த 31ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்றிருந்தார்.
அப்போது, ஆண்டாளிடம், பேச்சு கொடுத்த மர்மநபர், முதியோர் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, நகை அணிந்திருந்தால் உதவித்தொகை கிடைக்காது எனக் கூறி ஆண்டாளிமிருந்த ஒன்றரை சவரன் செயினை அந்த நபர் வாங்கியுள்ளார். பின், ஜெராக்ஸ் எடுத்து வருவதாக கூறிச் சென்றவர் செயினுடன் மாயமனார்.
இதுகுறித்து ஆண்டாள் அளித்த புகாரின் பேரில்,கள்ளக்குறிச்சி போலீசார் பஸ் நிலையம் பகுதியில் இருந்த சி.சி.டி.வி., பதிவை ஆய்வு செய்தனர்.
அதில், மூதாட்டியை ஏமாற்றிய மதுரை, எல்லீஸ் நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் சித்திரைவேல், 21; என்பது தெரிந்தது. தொடர்ந்து, சித்திரைவேலை போலீசார் கைது செய்தனர்.