/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்கிலிருந்து விழுந்த மூதாட்டி பரிதாப பலி
/
பைக்கிலிருந்து விழுந்த மூதாட்டி பரிதாப பலி
ADDED : ஜூன் 11, 2024 06:58 AM
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி பலத்த அடிபட்டு இறந்தார்.
விருத்தாசலம் தாலுகா செம்பளக்குறச்சியை சேர்ந்தவர் சஞ்சீவிகுமார், 35; ஹோமியோபதி டாக்டர். இவர் தனது தாயாரான கம்சலா, 68; என்பவரை பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு, உளுந்தூர்பேட்டை தாலுகா செம்மணங்கூரில் நடந்த மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிகாக சென்று கொண்டிருந்தார்.
உளுந்தூர்பேட்டை தாலுகா காட்டுநெமிலி அருகே நெடுஞ்சாலையிலுள்ள வேகத் தடை வழியாக சென்றபோது, நிலை தடுமாறி கம்சலா கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த மூதாட்டி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று விடியர்காலை ஏற்றிக் கொண்டு சென்றனர். ஆனால் மூதாட்டி வரும் வழியிலேயே இறந்து விட்டார்.
இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.