/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆற்றில் தத்தளித்த மூதாட்டி மீட்பு திடீரென மாயமானதால் பரபரப்பு
/
ஆற்றில் தத்தளித்த மூதாட்டி மீட்பு திடீரென மாயமானதால் பரபரப்பு
ஆற்றில் தத்தளித்த மூதாட்டி மீட்பு திடீரென மாயமானதால் பரபரப்பு
ஆற்றில் தத்தளித்த மூதாட்டி மீட்பு திடீரென மாயமானதால் பரபரப்பு
ADDED : ஆக 09, 2024 04:37 AM

கள்ளக்குறிச்சி: கோமுகி ஆற்றில் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் கோமுகி ஆற்றில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பெண் ஒருவர் தத்தளித்து கொண்டிருந்தார். தகவலறிந்த கரியாலுார் 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளர் அம்மு மற்றும் ஓட்டுனர் குணசேகரன் ஆகியோர் விரைந்து சென்று, ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரிடம் கச்சிராயப்பாளையம் போலீசார் விசாரித்தில், அவர் சேலம் வெள்ளாளப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி பவளக்கொடி,60; என்பது தெரிய வந்தது. ஆனால், ஆற்றில் எப்படி சிக்கினார் என்பதை கூற மறுத்துவிட்டார். இந்நிலையில் மூதாட்டி மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.