/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
/
விவசாயியை தாக்கிய வாலிபர் கைது
ADDED : ஆக 18, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கஞ்சமலை மகன் ராஜபாண்டி, 24; இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் பெண்ணின் படங்களை 'வாட்ஸ் ஆப்'பில் பகிர்ந்தார்.
இதனையறிந்து தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தையை ராஜபாண்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ராஜபாண்டி மீது உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

