ADDED : செப் 11, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் விளம்பார் கிராமத்தில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிஎண்88 எல்1530 என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி சென்றது தெரிந்தது.
இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் முத்துராமன் மகன் வீரமுத்து,30; என்பவரை போலீசார் கைது செய்தனர்.