/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
/
உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
ADDED : மே 09, 2024 04:12 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான உயர்கல்வி வழிகாட்டி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
சி.இ.ஓ., முருகன் தலைமையில் பயிற்சி கருத்தாளார்கள் கலந்து கொண்டு பிளஸ் 2 முடித்த மாணவார்கள் எந்தந்த படிப்புகளை தேர்வு செய்தால், உடனடியாக வேலை கிடைக்கும் என்பதற்கான கருத்துரைகளை வழங்கினர்.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ள 45 அரசு பள்ளிகளை சேர்ந்த வழிகாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்கள் தங்கள் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் அதில் உள்ள பல்வேறு விதமான பாடப்பிரிவுகள் குறித்தும் ஆலோசனைகளை வழங்கி உயர்கல்வி சேர்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டனர். உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.