/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தபால் ஓட்டுகள் எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
/
தபால் ஓட்டுகள் எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : மே 30, 2024 11:22 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில், தபால் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை ஓட்டு எண்ணும் மையான சின்னசேலம் அடுத்த அ.வாசுதேவனுார் மகாபாரதி பொறியியல் கல்லுாரியில் வரும் 4ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி தபால் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் வரும் 4ம் தேதி காலை 5:30 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் இருக்க வேண்டும். ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கான அடையாள அட்டை மற்றும் நியமன ஆணையை கட்டாயம் அணிந்து வரவேண்டும்.
மொபைல்போன் உள்ளிட்ட இதர எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வரக்கூடாது. தவறி மொபைல் போன் எடுத்து வருவோர் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள மொபைல் கலெக் ஷன் சென்டரில் ஒப்படைத்து உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மேஜை எண் ஒதுக்கீடுக்கான மூன்றாவது சுழற்சி முறை நடைபெறும்.
காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டு எண்ணும் பணி துவங்கும். தபால் ஓட்டுகள் எண்ணிக்கை 6 மேஜைகளில் எண்ணப்படும்.
ஒவ்வொரு மேஜையிலும் ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், ஒரு மேற்பார்வையாளர், ஒரு நுண்பார்வையாளர் இருப்பார்கள். உறுதிமொழிப்படிவம் முழுமையாக சரியாக உள்ளவற்றை எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தபால் ஓட்டுக்கான படிவங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) ரமேஷ், (தேர்தல்) சங்கர், தனி தாசில்தார் பசுபதி மற்றும் தபால் ஓட்டு எண்ணும் அலுவலர்கள் பங்கேற்றனர்.