/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
7 தாசில்தார்கள் இடமாற்றம்; கலெக்டர் பிரசாந்த் உத்தரவு
/
7 தாசில்தார்கள் இடமாற்றம்; கலெக்டர் பிரசாந்த் உத்தரவு
7 தாசில்தார்கள் இடமாற்றம்; கலெக்டர் பிரசாந்த் உத்தரவு
7 தாசில்தார்கள் இடமாற்றம்; கலெக்டர் பிரசாந்த் உத்தரவு
ADDED : ஜூலை 31, 2024 04:18 AM
கள்ளக்குறிச்சி : வருவாய்த்துறையில் 7 தாசில்தார்கள், 13 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்தும், துணை தாசில்தார் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு பதவி உயர்வு வழங்கியும் கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்த கோவிந்தராஜ் பதவி உயர்வு பெற்று, கல்வராயன்மலை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருக்கோவிலுார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் காதர்அலி, உளுந்துார்பேட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி, கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நளினி, கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.
உளுந்துார்பேட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் மணிமேகலை, அதே அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், உளுந்துார்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கண்ணன், திருக்கோவிலுார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் விஜயபிராபாகரன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் நடராஜன், கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இளையராஜாவுக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அலுவலகத்தில் ஆ-பிரிவு தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, மாவட்டத்தில் 13 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.