/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழங்குடியின மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்க விண்ணப்பிக்கலாம்

ADDED : மே 30, 2024 06:20 AM
கள்ளக்குறிச்சி: பழங்குடியினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகையுடன் வெளிநாடுகளில் படிப்பை தொடர விண்ணப்பம் செய்யலாம்.
இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் உயர்படிப்புக்கான கல்வி உதவித் தொகை மத்திய அரசின் அறிவிப்பின் படி வழங்கப்படுகிறது. 2024-25ம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்டி மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள பழங்குடியின மாணவ மாணவிகள் http://overseas.tribal.gov.in என்ற இணையவழியில் விண்ணப்பிக்கலாம். வரும் 31 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் உள்ளது.