ADDED : மார் 10, 2025 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சிட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இருவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் உள்ளது.
கடந்த, 6ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பு ஆதரவாளர்களும் தாக்கிக் கொண்டனர்.
இதில், பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த பீரோ, 'டிவி' உள்ளிட்டவை உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், சண்முகம், பாலகிருஷ்ணன் 8 பேர் மீது வழக்குப் பதிந்து, ஏழுமலை மனைவி அருணா, 30; இருசன் மனைவி செல்வி, 50; ஆகிய இருவரையும் வட பொன்பரப்பி போலீசார் கைது செய்தனர்.