/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதியின்றி எடுத்த மண் இரண்டு லாரிகள் பறிமுதல்
/
அனுமதியின்றி எடுத்த மண் இரண்டு லாரிகள் பறிமுதல்
ADDED : மே 24, 2024 11:05 PM
கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் ஏரியில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வரஞ்சரம் அடுத்த மலைக்கோட்டாலம் ஏரியில் லாரிகளில் கிராவல் மண் அள்ளப்படுவதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் மலைக்கோட்டாலம் ஏரிக்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் லாரிகளை நிறுத்தி விட்டு, டிரைவர்கள் தப்பினர்.
உடன், போலீசார் சென்று அரை யூனிட் கிராவல் மண்ணுடன் இருந்த 2 லாரிகளையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
மேலும், தப்பியோடிய மலைக்கோட்டாலம் அய்யம்பெருமாள் மகன் ராஜா, மாரிக்கண்ணு மகன் மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

