/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: வளர்ச்சிப் பணி கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
/
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: வளர்ச்சிப் பணி கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: வளர்ச்சிப் பணி கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்: வளர்ச்சிப் பணி கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
ADDED : மே 07, 2024 11:15 PM

கள்ளக்குறிச்சி : கோடை வெயில், வெப்பத்தில் இருந்து பொதுமக்களை காக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார், எஸ்.பி., சமய்சிங்மீனா முன்னிலை வகித்தனர்.
மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலர் பிரதீப்யாதவ் தலைமை பேசியதாவது:
மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அங்குள்ள ஆழ்துளை கிணறுகளை துார்வாரி ஆழப்படுத்தவும், கை பம்புகள் அமைக்கவும், சிறு மின்விசை பம்புகள், மின் மோட்டார்கள் ஆகியவற்றை தினமும் கண்காணிக்க வேண்டும்.
திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி சாலையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகள் நடைபெறுவதால், அவ்வழித்தடத்தில் ஏற்படும் குடிநீர் குழாய் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மருத்துவத்துறை சார்பில் கோடை வெப்பம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், கடைவீதிகள் உள்ளிட்ட இடங்களில் ஓ.ஆர்.எஸ்., உப்பு கரைசல் வழங்கவும், மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய அளவில் டாக்டர்களை பணியமர்த்தவும், காலை 11.00 மணிக்குள் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள் மூலம் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள், பாதுகாப்பு குடோன்கள், எளிதில் தீப்பிடிக்கக் கூடிய திரவங்கள், வாயுக்கள் உள்ள தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வீடுகளில் இருந்து வெளியில் செல்வதை முழுமையாக தவிர்க்கவும், வெளியில் செல்லும் போது பருத்தி ஆடைகளை அணிந்து, தண்ணீர் பாட்டில், குடை, தொப்பி, கண் கண்ணாடி, காலணி உள்ளிட்டவற்றை அணிந்து செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதீப்யாதவ் பேசினார்.

