/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியி்ல் வைகாசி விசாக கருட சேவை
/
கள்ளக்குறிச்சியி்ல் வைகாசி விசாக கருட சேவை
ADDED : மே 24, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வைகாசி விசாக கருட சேவை உற்சவம் நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ பெருமாள், உபயநாச்சியார் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, கருட வாகனத்தில் வீதியுலா சென்று அருள்பாலித்தார். மண்டகப்படி சேவை, சாற்றுமுறை பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.