/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி 1,010 சிலைகள் பிரதிஷ்டை
/
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி 1,010 சிலைகள் பிரதிஷ்டை
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி 1,010 சிலைகள் பிரதிஷ்டை
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி 1,010 சிலைகள் பிரதிஷ்டை
ADDED : செப் 08, 2024 06:43 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மாவட்டம் முழுதும் 1010 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மந்தைவெளி, காந்தி ரோடு என முக்கிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானம் வழங்கி பூஜை நடந்தது.
மாவட்டம் முழுதும் இந்து முன்னணி சார்பில், கள்ளக்குறிச்சியில் 127, சின்னசேலத்தல் 64, உளுந்துார்பேட்டையில் 42, சங்கராபுரத்தில் 35, கல்வராயன்மலையில் 5, திருக்கோவிலுாரில் 22, தியாகதுருகத்தில் 53, எலவனாசூர்கோட்டையில் 13, திருநாவலுார், 27, ரிஷிவந்தியம் 47, மணலுார்பேட்டை 60 என மொத்தம் 495 சிலைகள், சுற்றுப்புறங்களில் கிராம மக்கள் சார்பில் 515 என மொத்தம் 1,010 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து பூஜைகளுக்குப்பின் அனைத்து பகுதி பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும், 3ம் நாள் மற்றும் 9ம் தேதி விஜர்சன ஊர்வலம் நடத்தி நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. மணலுார்பேட்டையில் மட்டும் 5ம் நாள் சிலைகள் கரைக்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தல்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் கோமுகி அணை, திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆறு, எலவனாசூர்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் குளம், பிரிதிவிமங்கலம், சின்னசேலம், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை மற்றும் திருநாவலுார் ஏரிகள் ஆகிய இடங்களில் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி திருவிழாவையொட்டி எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவின்படி, குழுக்கள் வாரியாக போலீசார் அமைக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.