/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது 3 இடங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது 3 இடங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது 3 இடங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுது 3 இடங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்
ADDED : ஏப் 20, 2024 05:49 AM
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே அடுத் தடுத்து 3 இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் ஓட்டுப்பதிவு தாமதமாக துவங்கியது.
சங்கராபுரம் அடுத்த லக்கினாயகன்பட்டி மற்றும் மண்டபகபாடி கிராமங்களில் அமைக்கப்பட்ட ஓட்டுச்சாவடிகளில் நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டு போட வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில்காத்திருந்தனர்.
அப்போது ஓட்டுப்பதிவு இயந்திரம் இயங்காமல் பழுதானது. பின்னர் தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்த வந்து பழதை சீரமைத்தனர். அதனைத் தொடர்ந்து 8:30 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.
அதேபோன்று அரசம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு இயந்திர பழுது சீரமைத்த பின் காலை7:15 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.