/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெரியசிறுவத்துார் ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
/
பெரியசிறுவத்துார் ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
பெரியசிறுவத்துார் ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
பெரியசிறுவத்துார் ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ADDED : மே 24, 2024 06:10 AM
கள்ளக்குறிச்சி: பெரியசிறுவத்துார் ரயில்வே நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்து ரயில்வே நிலையம் செயல்பட்டு வருகிறது. சின்னசேலத்திற்கு அடுத்த ரயில் நிறுத்தமாக பெரிய சிறுவத்துார் விளங்கி வருவதால், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நிலையமாக விளங்குகிறது. இங்கு ஒரு நாளைக்கு 6 ரயில்கள் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினசரி விருத்தாசலம், சேலம், காரைக்கால், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
தினசரி பள்ளி, கல்லுாரி செல்லும் ஏராளமான மாணவர்கள் மற்றும் வெளியூர்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ரயில் நிலையத்தில் போதுமான கழிவறை, குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லை. மேலும் பயணிகள் அமரும் இருக்கைகள் உடைந்தும், புல், பூண்டு முளைத்து புதர் மண்டியும் காணப்படுகிறது.
மேற்கூரை இல்லாததால், மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழி செம்மண் சாலையாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. வாகனங்கள் நிறுத்துவதற்கு இடவசதி இல்லை.
இதனால் பெரும்பாலான பயணிகள் 15 கி.மீ., தொலைவில் உள்ள சின்னசேலம் ரயில் நிலையத்தை நாடி செல்வது தொடர் கதையாகி வருகிறது. எனவே பெரிய சிறுவத்துார் ரயில் நிலையத்தில் கழிவறை, மேற்கூரை, வாகனம் நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.