/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் படுகாயம்
/
புளியமரம் முறிந்து விழுந்ததில் பெண் படுகாயம்
ADDED : மார் 07, 2025 07:03 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் புளிய மரம் முறிந்து விழுந்து பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
கள்ளக்குறிச்சி-சேலம் சாலை, ஏமப்பேர், பஸ் நிலையத்தில், பெண் ஒருவர் நேற்று இரவு 7:00 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த புளிய மரம் திடீரென முறிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்தவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.
அங்கு இருந்தவர்கள், அவரை மீட்டு, 108 ஆம்புலன்சில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுஒருபுறம் இருக்க சாலையில் விழுந்த மரத்தால், வாகனங்கள் செல்ல முடியாமல் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து, மரம் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் அந்த சாலையில், சாலையில் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.