ADDED : மே 07, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே பைக் மீது அரசு பஸ் மோதி மூட்டை துாக்கும் தொழிலாளி இறந்தார்.
சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த சேவி, 50; இவர் சங்கராபுரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சுமை துாக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நேற்று காலை 8:00 மணிக்கு டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பூட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேவி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

