/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 139 போலீசார் பணியிட மாற்றம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 139 போலீசார் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 139 போலீசார் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 139 போலீசார் பணியிட மாற்றம்
ADDED : ஜன 21, 2025 06:45 AM
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 139 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்து வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 119 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிறப்பு இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், அமானுல்லா, தங்க வேல் கள்ளக்குறிச்சிக்கும், பாஸ்கர் (எடைக்கல்), வினயஆனந்த் (மாவட்ட குற்றப் பிரிவு), சக்திவேல் (கரியாலுார்), ஜெயலட்சுமி (கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம்), சக்திவேல் (திருநாவலுார்), ஜாபர் (உளுந்துார் பேட்டை), ராஜேந்திரன் (மூங்கில்துறைப்பட்டு), ரமேஷ் (நெடுஞ்சாலை பிரிவு-1), கண்ணன் (தியாகதுருகம்), பெரியநாயகம் டோமினிக் (திருக்கோவிலுார்) மற்றும் 106 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் நெடுஞ்சாலை பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் விஜய அமிர்தராஜ் (எடைக்கல்), பாஸ்கரன் (வரஞ்சரம்), சாமிதுரை (கரியாலுார்), பழனியாப்பிள்ளை (திருப்பாலப்பந்தல்), செந்தில்முருகன் (எலவனாசூர்கோட்டை) மற்றும் 15 போலீசார் என 20 பேர் பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார்.