/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
என்.எஸ்.எஸ்., முகாமில் நடுவதற்கு 10 ஆயிரம் பனை விதைகள் தயார்
/
என்.எஸ்.எஸ்., முகாமில் நடுவதற்கு 10 ஆயிரம் பனை விதைகள் தயார்
என்.எஸ்.எஸ்., முகாமில் நடுவதற்கு 10 ஆயிரம் பனை விதைகள் தயார்
என்.எஸ்.எஸ்., முகாமில் நடுவதற்கு 10 ஆயிரம் பனை விதைகள் தயார்
ADDED : அக் 19, 2025 11:58 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாமில் நடுவதற்காக 10 ஆயிரம் பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 45 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் பணிகள் மேற்கொள்கின்றனர்.
இதனையொட்டி முகாமில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் ஏரிக்கரை மற்றும் குளக்கரை பகுதியில் பனை விதைகள் நடும் பொருட்டு பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் பனை விதைகள் வழங்கப்பட்டது.
இதற்காக மொத்தமாக 10 ஆயிரம் பனை விதைகள் சேகரித்து பிரித்து வழங்கும் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கி, பள்ளிகளின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் பனை விதைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகோபால், விஷ்ணுமூர்த்தி, பள்ளி தலைமையாசிரியர் கலாபன், மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், என்.எஸ்.எஸ்., மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் சாமிதுரை, பனை விதைகளை பள்ளி கல்வி துறைக்காக சேகரித்து வழங்கினார்.
பனை விதைகளை கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கச்சிராயபாளையம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.