/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்டத்தில் 1,150 விநாயகர் சிலைகள்... கோலாகலம்; 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
/
மாவட்டத்தில் 1,150 விநாயகர் சிலைகள்... கோலாகலம்; 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
மாவட்டத்தில் 1,150 விநாயகர் சிலைகள்... கோலாகலம்; 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
மாவட்டத்தில் 1,150 விநாயகர் சிலைகள்... கோலாகலம்; 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
ADDED : ஆக 26, 2025 11:48 PM

கள்ளக்குறிச்சி, ஆக. 27- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா, பொது இடங்களில் 1,150 சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்து கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார் ஆகிய பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியன்று ஊர் பொது இடத்திலும், விநாயகர் கோவிலுக்கு முன்பும் பிரமாண்ட சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கமாகும். இன்று (27ம் தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி சிலைகள் வாங்குவது, சிலைகள் வைக்கும் இடத்தில் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட விழா கொண்டாடத்திற்கான பணிகளில் இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் வீடுகளில் வைத்து வழிபடும் களிமண்ணால் ஆன சிறிய வகையிலான விநாயகர் சிலைகள் அதிகளவில் விற்பனைக்கு குவிந்துள்ளன.
மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய பல் வேறு முக்கிய இடங்களில் தற்காலிக கடைகள் அமைத்து, களி மண்ணில் தயாரித்த பல்வேறு வண்ணங்கள் கொண்ட விநாயகர் சிலைகள் விற்பனை படுஜோராக நடக்கிறது.
அதேபோல் வழிபாட்டிற்கு தேவையான பூஜை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக் கள், இளைஞர்கள் ஆர்வமு டன் வாங்கி செல்கின்றனர்.
மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, திருக்கோவி லுார், உளுந்துார்பேட்டை ஆகிய மூன்று உட்கோட்ட காவல் நிலைய பகுதிகளில் மொத்தம் 1,150 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு பின் மூன்று நாளில் சிலைகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆறு, குளம், ஏரிகள், அணைகளில் விஜர்சனம் செய்யப்படும். விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா குழு வினருக்கு பல்வேறு கட்டுபாடுகள் விதித்துள்ளன.
அதில் சுற்றுச் சூழல் பாதிக்காத மூலப்பொருளால் செய்த சிலைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீர் நிலைகள் பாதிக்காத வண்ணம் இயற்கையாக மக்கக்கூடிய, நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே சிலைகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், தெர்மாக்கோல் பொருட்களை கொண்ட சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க கூடாது. மாவட்ட நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் கரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளன.
பொது இடங்களில் பிரதிஷ்டை செய்வது முதல் நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கு எடுத்தும் செல்லும் வரை தொடர் கண்காணிப்பு, விசர்ஜன ஊர்வலம் உள்ளிட்ட விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மாவட்ட எஸ்.பி., மாதவன் மேற்பார்வையில் 2 ஏ.டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 6 டி.எஸ்.பி.,க்கள், அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார், ஆயுதப்படை போலீசா ர் என மொத்தம் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.