தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/இரு தரப்பினர் மோதல் 13 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 13 பேர் மீது வழக்கு

இரு தரப்பினர் மோதல் 13 பேர் மீது வழக்கு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 10:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 10:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அருகே இரு தரப்பினர் மோதலில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரகண்டநல்லூர் அடுத்த டி.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் கார்த்தி, 38;இவர், நேற்று முன்தினம் தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மெடிக்கல் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம், 60; என்பவரிடம், ஓரமாக நிற்கும்படி கூறியுள்ளார்.

இதனால், வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த, அங்கிருந்த வேலாயுதம் தரப்பினர், கார்த்தியை சரமாரியாக தாக்கினர். இது குறித்து, கார்த்தி அளித்த புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், வேலாயுதம், 60; மெடிக்கல் அருகே நின்று, செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, கார்த்தி, பன்னீர் மற்றும் சிலர் வந்து திட்டி தாக்கியதாக, அவரது மருமகன் ஏழுமலை, 39; போலீசில் புகார் அளித்துள்ளார்.

இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், 13 பேர் மீது, அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us