UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 09:27 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரில் இருந்து, கரும்பு ஏற்றிய டிராக்டர், கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலைக்கு நேற்று மாலை சென்றது. கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில் சென்றபோது, டிராக்டரில் இருந்த கரும்பு மின் கம்பத்தின் மீது மோதியது. இதில், மின்கம்பிகள் அறுந்து, சாலையோரமாக இருந்த 3 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. உடன், டிராக்டரை சாலையோரமாக நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பி ஓடினார்.
சாலையின் குறுக்கே மின்கம்பம் விழுந்ததால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தகவலறிந்த மின்வாரி பணியாளர்கள் சென்று உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்து சரி செய்தனர்.
