ADDED : நவ 09, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் பகுதியில் பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 57; அதே பகுதியைச் சேர்ந்தவர் காந்தி. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் மீண்டும் ஏற்பட்ட தகராறில் காந்தி தனது மகன்களுடன் சேர்ந்து சக்திவேல் மனைவி தமிழரசியை, 50; திட்டி இரும்பு கம்பியால் தாக்கினர்.
புகாரின் பேரில், காந்தி, அவரது மகன்கள் சதீஷ், 27; ராஜேஷ், 30; ஆகியோர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து சதீஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர்.