/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது
/
நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த 2 பேர் கைது
ADDED : அக் 26, 2025 05:07 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுாரில் காப்புக் காட்டில் விலங்குகளை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மணலுார் காப்புக் காட்டு பகுதியில் வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், இளையாங்கண்ணியைச் சேர்ந்த கிறிஸ்துராஜ் மகன் சகாயராஜ், 29; விரியூரைச் சேர்ந்த சூசைநாதன் மகன் அல்போன்ஸ் பிரிட்டோ, 23; என தெரியவந்தது.
தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து அவர்கள் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கி மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

