/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒரே இடத்தில் 4 பைக்குகள் திருட்டு சின்னசேலம் போலீஸ் விசாரணை
/
ஒரே இடத்தில் 4 பைக்குகள் திருட்டு சின்னசேலம் போலீஸ் விசாரணை
ஒரே இடத்தில் 4 பைக்குகள் திருட்டு சின்னசேலம் போலீஸ் விசாரணை
ஒரே இடத்தில் 4 பைக்குகள் திருட்டு சின்னசேலம் போலீஸ் விசாரணை
ADDED : அக் 26, 2025 05:07 AM
சின்னசேலம்: சின்னசேலம் அருகே ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 பைக்குகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்வராயன்மலை, சின்ன திருப்பதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை அன்று தேர் திருவிழா நடைபெறும்.
கடந்த 18ம் தேதி நடந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். பைக்கில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் அருகே நிறுத்தி விட்டுச் சென்றனர்.
திரும்பி வந்து பார்த்தபோது, கடலுார் மாவட்டம், பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், 34; வெங்கடேஷ், 36; சேலம் மாவட்டம், முல்லைவாடி பன்னீர்செல்வம், 47; சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் இளவரசன். 63; ஆகிய 4 பேரின் ஸ்பிளண்டர் பைக்குகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகார்களின் பேரில், சின்னசேலம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.