ADDED : செப் 20, 2026 04:01 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகர பகுதியில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் சலாம்உசேன் மற்றும் பிரீத்தா ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் முத்துக்குமார், 60; என்பவர் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, அவரிடமிருந்த 11 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், நான்குமுனை சந்திப்பு அருகே விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்த சிதம்பரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜன், 49; என்பவரை கைது செய்து 8 பிராந்தி பாட்டில்கள் மற்றும் ஒரு பீர் பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
