தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோ அதிகரிப்புர்: சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை தேவை

மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோ அதிகரிப்புர்: சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை தேவை

மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோ அதிகரிப்புர்: சுகாதாரத் துறையினரின் நடவடிக்கை தேவை


UPDATED : செப் 20, 2026 05:58 PM

ADDED : செப் 20, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 05:58 PM ADDED : செப் 20, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து நகர மற்றும் கிராமப் பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கிறது. குறிப்பாக, ஒரு சில தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையோரங்களில் தேங்கி நின்று சாக்கடையாக மாறுகிறது. இதுதவிர, பொது இடங்களில் புற்கள் வளர்ந்து புதர்களாக மண்டியுள்ளது.

குறிப்பாக, கிராமப்புற வீடுகளில் உள்ள உரல், தேங்காய் சிரட்டை, பயன்படுத்தபடாத டயர், திறந்தவெளி தண்ணீர் தொட்டி உள்ளிட்டவைகளில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தியாகிறது.

மாவட்டத்தில் சில தினங்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் கழிவுநீர் கால்வாய், புதர்மண்டி கிடக்கும் இடங்கள், நீண்ட நாட்களாக கொட்டி கிடக்கும் குப்பைகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகிறது.

கொசுக்கடி அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதன் விளைவாக காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தலைவலி, காய்ச்சல், சளி, உடல்வலி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டதும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களிடம் ஆலோசனை பெறாமல், அருகில் உள்ள மெடிக்கல்களில் தாமாக மருந்து வாங்கி உட்கொள்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். பொது இடங்களில் மழை நீர் தேங்கும் வகையில் உள்ள டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி, புதர்மண்டிய இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

கழிவு நீர் தேங்கியுள்ள இடங்களில் கிருமி நாசினி தெளித்து, அனைத்து தெருக்களிலும் கொசு மருந்து அடிக்க மாவட்ட வேண்டும். வீடுகளில் மழை நீர் தேங்கும் வகையில் உள்ள தேங்காய் சிரட்டை, உரல், டயர், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us