ADDED : பிப் 16, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏமப்பேர் பகுதியில் கா.மாமனந்தலை சேர்ந்த முகமதுபரூக் மகன் முகமதுராசிப்,25; நவிஜமாதுல்லா மகன் சதாதுல்லா, சங்கராபுரத்தை சேர்ந்த சுபாஷ்,31; ஆகியோர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது.
உடன், போலீசார் வழக்குப் பதிந்து முகமது ராசிப்,25; சுபாஷ்,31; ஆகியோரை கைது செய்து, 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய சதாதுல்லாவை போலீசார் தேடி வருகின்றனர்.

