/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
/
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
ADDED : டிச 09, 2024 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே மது பாட்டில் விற்ற தென்கீரனுார் பெரியசாமி மகன் ராஜா, 21; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 7 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று, தேவபாண்டலம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற செல்வகுமார், 40; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.