/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது
/
பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேர் கைது
ADDED : ஆக 14, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே பைக்கில் பிராந்தி பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த கடுவனுார், தொழுவந்தாங்கல் சாலையில் நேற்று சங்கராபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் பிராந்தி பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணன், 45; அதே ஊரைச் சேர்ந்த கணேசன், 35; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, பைக் மற்றும் 50 குவார்ட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.