ADDED : மார் 23, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே முன்விரோத தகராறில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த அரும்புராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 65; அதே பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; உறவினர்கள். இருவருக்குமிடையே சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று அவர்களுக்கும் மீண்டும் தகாறு ஏற்பட்டது. இதில், ஏழுமலை தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அருவாளால் சுப்ரமணியனை தாக்கினார்.
இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில், ஏழுமலை, ராஜகோபால், 60; ரங்கநாதன், நாராயணசாமி ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து ஏழுமலை மற்றும் ராஜகோபாலையும் கைது செய்தனர்.