ADDED : ஜன 16, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பழையனுார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் சாராயம் விற்ற அந்தோணிராஜ், 45; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதே போல் சேஷசமுத்திரம் கிராமத்தில் சாராயம் விற்ற சுப்ரமணியன், 48; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 15 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.