/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
/
மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது
ADDED : ஏப் 21, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே மதுபாட்டில் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மனைவி அஞ்சலை,55; மற்றும் அண்ணாமலை மனைவி தனலட்சுமி,42; ஆகிய இருவரும் தங்களது வீட்டிற்கு பின்புறம் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து அஞ்சலையை கைது செய்து, அவரிடமிருந்த 11 மதுபாட்டில்களையும், தனலட்சுமியை கைது செய்து அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

