/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேம்பாலத்தில் பைக் மோதி விபத்து: உளுந்துார்பேட்டையில் 2 வாலிபர்கள் பலி
/
மேம்பாலத்தில் பைக் மோதி விபத்து: உளுந்துார்பேட்டையில் 2 வாலிபர்கள் பலி
மேம்பாலத்தில் பைக் மோதி விபத்து: உளுந்துார்பேட்டையில் 2 வாலிபர்கள் பலி
மேம்பாலத்தில் பைக் மோதி விபத்து: உளுந்துார்பேட்டையில் 2 வாலிபர்கள் பலி
ADDED : அக் 22, 2025 09:00 AM

உளுந்துார்பேட்டை: அக். 22-: உளுந்துார்பேட்டையில் பஸ்சை முந்தி செல்ல முயன்றபோது, மேம்பால தடுப்பு கட்டையில் பைக் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மோகன், 21; கல்லுாரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ஹரிபிரசாத்,16; (பிளஸ் 1 மாணவர்). கண்ணன் மகன் சூரியபிரகாஷ், 19; (கல்லுாரி மாணவர்) ஆகியோருடன், பல்சர் பைக்கில் உளுந்துார்பேட்டை டோல்கேட்டில் உள்ள டீ கடைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணியளவில் சென்றனர்.
டீ குடித்து விட்டு உளுந்துார்பேட்டைக்கு திரும்பினர். நகர் மேம்பாலத்தில் தங்களுக்கு முன்னாள் சென்ற பஸ்சை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது, மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் மீது பைக் மோதியது. இதில், மேம்பாலத்தில் இருந்து துாக்கிவீசப்பட்ட மோகன், 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஹரிபிரசாத், சூரியபிரகாஷ் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள், இருவரையும் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிபிரசாத் இறந்தார்.
விபத்து குறித்து உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பிரீத்தா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.