/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாற்று கட்சியினர் 20 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்
/
மாற்று கட்சியினர் 20 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்
ADDED : அக் 30, 2025 10:36 PM

உளுந்துார்பேட்டை: திருநாவலுார்  மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலையில் மாற்று கட்சியினர் 20 பேர் தி.மு.க.,வில் இணைந்தனர்.
உளுந்துார்பேட்டை தொகுதி தி.மு.க., திருநாவலுார்  மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலையில் மாற்று கட்சியினர் 20 பேர் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன், உளுந்துார்பேட்டை தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதரன், திருநாவலுார்  மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலையில் இணைந்த பாண்டுர் பகுதி  மாற்றுக் கட்சியை சேர்ந்த சிவராஜ்  ராஜா, பாலாஜி, முரளி, இளையராஜா, புருஷோத்தமன், ராஜதுரை உள்ளிட்ட 20 பேருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.
அப்போது உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ்,  ஒன்றிய அவைத் தலைவர் சக்திவேல், ஒன்றிய விவசாயணி அமைப்பாளர் பாக்கியராஜ்,  கிளை கழக  செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

