UPDATED : அக் 09, 2026 03:57 PM
ADDED : அக் 09, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதி மீறிய 22 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ெஹல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியது காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது என 22 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
