/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய அளவிலான மல்லர் கம்பம் போட்டி கள்ளக்குறிச்சியில் 24 மாணவர்கள் தேர்வு

ADDED : அக் 08, 2025 11:23 PM

கள்ளக்குறிச்சி: தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான மல்லர் கம்ப போட்டியில் பங்கேற்பதற்கு நடந்த மாநில அளவிலான தேர்வில் 24 பேர் தேர்வாகினர்.
இந்திய பள்ளிகள் விளையா ட்டு குழுமம் சார்பில் மத்தியபிரதேசம், உஜ்ஜினியில் நவ., மாதம் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான மல்லர்கம்ப போட்டி நடக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்வதிற்கான மாநில அளவிலான தேர்வு போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏர்வாய்பட்டினம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டத்தைச் சே ர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர்.
3 பிரிவுகளின் கீழ் மல்லர்கம்பம் மற்றும் ரோப் மல்லர் கம்பம் போட்டி தேர்வு நடந்தது. போட்டிகளை கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்தார். மாவட்ட உற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில் போட்டிகள் நடத்தி, ஒவ்வொரு பிரிவிலும் 4 மாணவர் கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி முதல்வர் நிரஞ்ஜனி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர், தேசிய நடுவர்கள் ராமச்சந்திரன், ஜனார்த்தனன், பிரகாஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் தினகரன், சாமிதுரை, புஷ்பராணி உட்பட பலர் பங்கேற்று அணியை தேர்வு செய்தனர். 12 மாணவர்கள், 12 மாணவிகள் என மொத்தம் 24 பேருக்கு தேசிய போட்டியில் பங்கேற்பதற்கான ஆணை வழங்கப்பட்டது.