/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி
/
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி
ADDED : அக் 08, 2025 11:23 PM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கி நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை குறு மைய விளையாட்டு போட்டிகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடந்தது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து, மாவட்ட அளவிலான அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கி நடக்கிறது.
இதில் 14, 17,19 வயது என மூன்று பிரிவுகளின் கீழ் கால்பந்து, இறகு பந்து, வாலிபால், எறிபந்து, ஹாக்கி, கூடைபந்து, டேபிள் டென்னிஸ், கைபந்து, கோ கோ, கபடி உள்ளிட்ட குழு போட்டிகள் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டபந்தயம் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகள் நடக்கிறது. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
சின்னசேலம், வடக்கனந்தல், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி, மூரார்பாளையம் அரசு பள்ளி, ஏ.கே.டி., பள்ளி, தியாகதுருகம் இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது. சின்னசேலம் தனியார் உள்விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான இறகுபந்து, கால்பந்து போட்டியினை சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்து, மாணவிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மேற்பார்வையில் உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தி வருகின்றனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவர்.