/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 246 ஏரிகள் நிரம்பின: மீண்டும் மழையால் உபரிநீர் வெளியேற்றம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 246 ஏரிகள் நிரம்பின: மீண்டும் மழையால் உபரிநீர் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 246 ஏரிகள் நிரம்பின: மீண்டும் மழையால் உபரிநீர் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 246 ஏரிகள் நிரம்பின: மீண்டும் மழையால் உபரிநீர் வெளியேற்றம்
ADDED : டிச 13, 2024 06:51 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், அதிகளவிலான நெல் அரிசி ஆலைகள் இருப்பதால் கரும்பு, நெல் அதிகளவு சாகுபடி செய்வதுடன், மரவள்ளி, மக்காசோளம், மஞ்சள் உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாமாக, மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டின் கீழ் கோமுகி, மணிமுக்தா அணைகள், மூன்று ஆறுகள், 212 ஏரிகள் உள்ளன. அதேபோல், பஞ்சாயத்திற்குட்பட்டு மொத்தம் 381 ஏரிகள் உள்ளது. இரு அணைகள் மற்றும் ஏரிகளின் பாசனத்தை நம்பி ஆண்டுதோறும் மூன்று லட்சத்து 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.
பருவ மழை காலங்களில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நிரம்பும் போது, அணையின் பாதுகாப்பு கருதி ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். அத்தருணத்தில் ஆற்றில் உள்ள தடுப்பணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தோடும்.
இதற்கிடையே தடுப்பணைகளில் இருந்து சுற்று வட்டார பகுதியில் உள்ள ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்படும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பெரும்பாலான ஏரிகள் நிரம்புகிறது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், பெஞ்சல் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. அதில் கோமுகி, மணிமுக்தா அணைகள் நிரம்பியதால், ஆறுகள் வழியாக அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அதில் கோமுகி ஆற்றில் உள்ள 11 தடுப்பணைகள், மணிமுக்தா ஆற்றில் 4 தடுப்பணைகள் நிரம்பி வழிந்தோடின. இதனால் அனைத்து தடுப்பணையிலிருந்தும் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டது.
பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள 212 ஏரிகளில் 74 ஏரிகள் முழுமையாக நிரம்பி, உபரிநீர் வழிந்தோடுகிறது. மேலும் 17 ஏரிகள் 75 சதவீதத்தி மேல், 36 ஏரிகள் 50 சதவீதம் மேல், 75 ஏரிகள் 25 சதவீதத்திற்கு அதிகமாக தண்ணீர் தேங்கியுள்ளது. 10 ஏரிகளில் மட்டும் 25 சதவீதத்திற்கு குறைவாக தண்ணீர் உள்ளது.
அதேபோல் பஞ்சாயத்து கட்டுபாட்டில் உள்ள 381 ஏரிகளில் 172 ஏரிகள் முழுதும் தண்ணீர் நிரம்பி வழிந்தோடுகிறது. மேலும் 49 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல், 88 ஏரிகள் 50 சதவீததிற்கு மேல், 62 ஏரிகள் 25 சதவீததிற்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ளது. 10 ஏரிகளில் மட்டும் 25 சதவீத்திற்கும் குறைவாக தண்ணீர் தேங்கியுள்ளது.
மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்ககூடிய அணைகள், ஏரிகள் போன்ற நீர் நிலைகள் நிரம்பி வழிந்தோடுகிறது. தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் ஏரிகளின் கால்வாய்களில் நீர் வரத்து அதிகரித்து செல்கிறது. இதனால், ஏரிகளின் நீர் மட்டம் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது.