/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி.சி., பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது
/
வி.சி., பிரமுகரை தாக்கிய 3 பேர் கைது
ADDED : மே 08, 2025 01:45 AM
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே வி.சி., கட்சி பிரமுகரை தாக்கிய, 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 49; இவர் வி.சி., கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர்.
கடந்த இரு தினங்களுக்கு முன், இரவு 10:00 மணிக்கு, வடக்கனந்தல் ஆற்றுப்பாதை வழியாக பைக்கில் சென்றார்.
அப்போது அவரை வழிமறித்து, வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த, 3 வாலிபர்கள் தாக்கி, அவரது பைக்கை உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்த புகாரில் வழக்கு பதிந்த கச்சிராயபாளையம் போலீசார், வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த கோம்பையன் மகன் பாபு, 22; பாஸ்கர் மகன் தீனா, 24; தாகப்பிள்ளை மகன் பிரவீன், 19; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

