/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை
/
சாராய வழக்கில் கைதான 3 பேருக்கு 15 நாட்கள் சிறை
ADDED : ஏப் 19, 2025 01:09 AM
கள்ளக்குறிச்சி, ; கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை வரும், 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த நிராமணியை சேர்ந்த தங்கராசு, 70; கடந்த, 2024,ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தார். இதையடுத்து, கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்தது. பிரேத பரிசோதனை மற்றும் ரத்தமாதிரி ஆய்வக பரிசோதனை அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், 48; தாமோதரன், 40; விஜயா, 42; கோட்டைமேடு பரமசிவம், 40; கதிரவன், 30; ஜோசப், 40, சின்னதுரை, 36; ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
கைதானவர்கள் தெரிவித்த தகவலின் பேரில், மடுகரையை சேர்ந்த மாதவன் மகன் மாதேஷ், 19; ஷாகுல்அமீது, 61; கா.மாமனந்தல் தெய்வீகன்,35; ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, மூவரையும் கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மூவரையும் வரும் 2ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஹரிஹரசுதன் உத்தரவிட்டார்.

