/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மழைக்கு 3 கால்நடைகள் இறப்பு
/
மழைக்கு 3 கால்நடைகள் இறப்பு
ADDED : டிச 01, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்த மழையால் 3 கால்நடைகள் இறந்தன. ஒரு கூரை வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது.
கள்ளக்குறிச்சி தாலுகா, வாணாபுரம் வட்டம் மணியந்தல் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரமேஷ் என்பவரது கன்றுக்குட்டி இறந்தது. அதேபோல், சின்னமணியந்தல் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் மனைவி சத்யா என்பவரது ஆட்டுக்குட்டி, மணலுார்பேட்டையை சேர்ந்த கணேசன் மகன் சீனுவாசன் என்பவரது கன்றுக்குட்டி என 3 கால்நடைகள் இறந்தன.
மேலும் உளுந்துார்பேட்டை வட்டம் மதியனுார் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மகன் பலராமன் என்பவரது கூரை வீட்டின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது.

